தொகையிலக்கியக் கால அரசியலில் மூவேந்தரும் பிற தமிழ்ச்சமூகத்தாரும் (Mooventhar and Other Social Sects of Tamilnadu in the Politics During the Period of Anthologies)

Authors

  • Dr.S.Kanmani Ganesan Sivakasi, India

Keywords:

அதியமான், அகப்பா, குறுநிலமன்னர், திணைமாந்தர் தலைவர், நாகர், பார்ப்பார்

Abstract

கட்டுரைச் சுருக்கம்

பண்டைத்தமிழக அரசியலில் மூவேந்தரோடு ஊடாடிய  பிற வேந்தரையும் பிற சமூகத்தினரையும் விதந்து காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். பண்டைத்தமிழக அரசியல் வரலாற்றுடன் பிணைந்த சமூகவரலாறு விளக்கம் பெற இவ்ஆய்வு தேவை ஆகிறது. வரலாற்றியல் ஆய்வாக அமையும் இக்கட்டுரையில் புறநானூறும் பதிற்றுப்பத்தும் முதனிலைத் தரவுகள் ஆகின்றன. பிற எட்டுத் தொகைப் பாடல்கள், பத்துப்பாட்டு, அவற்றின் உரைகள், ஆய்வாளர் முடிபுகள் முதலியன இரண்டாம்நிலைத் தரவுகள் ஆகின்றன. வேந்தர், குறுநில மன்னர், திணைமாந்தரின் சார்பாளர் ஆகிய மூவகைத் தலைவருடன் நாகரும்  பார்ப்பாரும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. வேந்தன் அதியமான், பெயர் தெரியாத அகப்பாக் கோட்டையின் வேந்தன் ஆகியோரும் விளக்கம் பெறுகின்றனர்.

Downloads

Downloads

Published

2022-09-07

Issue

Section

Articles